இனிய காலை வணக்கம் அன்பு உடன்பிறப்புகளே,இன்று நம் மக்களிடம் ஒரு வியாதி பரவியிருக்கிறது.அது என்னவென்றால் பிள்ளைகளை மிக தொலை வில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடுவது.அதற்கு அவர்கள் கூறும் காரணம் நல்ல கோச்சிங் இருக்கு என்பதுதான்.நல்ல கல்வி வேண்டும்தான் ஆனால் அது தொலைவில் உள்ள பள்ளியிலும் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில்தான் கிடைக்கும் என்பது நம் கற்பனை.இதனால் பாதிக்கப்படுவது நம் குழந்தைகள்தான்,அதிகாலையிலேயே எழுந்து அவசரம் அவசரமாக தயாராகி பள்ளி வாகனம் நிறுத்தத்தை கடந்து விடுமோன்ற பயத்திலேயே எதையோ சாப்பிட்டு மதிய உணவு பையையும் முதுகில் புத்தக மூட்டை யுடன் அவர்கள் ஓடுவதை பார்த்தால் மனது வலிக்கிறது .இது ஒரு நாள் மட்டுமில்லை 14வருடங்கள் தொடரும். இப்படி வளரும் குழந்தைகள் மனது மரத்துப்போவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.பிற்காலத்தில் இந்த குழந்தைகளின் பெற்றோர் முதியோர் இல்லத்தை தேடி ஓட வேண்டிய நிலை வரலாம்.பெற்றோர் இருவரும் வேலைக்கச் செல்லுவோராயின் அவ்வளவுதான் அந்த குமழந்தைகள் வாழ்வின் மீதே வெறுப்போடவே வளர்வார்கள்.இவரகளின் அகராதியில் இரக்கம் கருனைக்கு பொருளே கிடையாது .இதெல்லாம் அவர்களின் தவறு இல்லை. எனவே கணவரின் வருமானம் போதுமானதாக இருந்தால்
மனைவி இல்லத்தரசியாக இருப்பதில் தவறில்லை,இல்லத்தில் அரசி இருந்தால் அந்த வீட்டில் கணவரும் குழந்தைகளும் அரசிக்கு கட்டுப்பட்டு (அன்புக்குத்தான்)ஆனந்தமாக வாழ்வார்கள்.மனைவிக்கு நல்ல வேலை வருமானமெனில் கணவர் எளிதான தொழிலை செய்து இல்லத்தரசனாக இருப்பதும் ஆரோக்கியமான குடும்பத்துக்கு அழகுதான்.எல்லா இதயங்களும் அன்பக்கும் அனுசரனைக்கும்தான் ஏங்கிக் கிடக்கு.

Comments
Post a Comment