இனிய மாலை வணக்கம், இப்போதய குழந்தைகள் இருபது வருட ங்களுக்கு முன் பிறந்தவர்களைப் போல் இயற்கையை ரசிக்க ,குதூகளிக்க வாய்ப்பில்லாதவர்கள்.நம்மைப் போல் மழையை பார்த்ததில்லை,விடுமுறைக்கு சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியவில்லை.இதற்கு யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை.இருக்கும் இயற்கையை ரசிக்க நாமதான் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். பெரிதாக ஒன்றமில்லை காலை நேரங்களில் நம் வீட்டருகே வரும் பறவைக்கு அரிசி,கம்பு போன்றவற்றை கொடுக்கச் சொல்லுங்கள். முதலில் சில நாள் பயப்படும் பறவைகள் ,சில ல நாட்களில் நம்மோடு சகஜமாய் பழகுவதைப் பார்த்து குழந்தைகள் குதூகலிப்பார்கள்.நீங்களே குழந்தையாக மாறி மகிழ்வீர்கள்.காலை நேரங்களில் தாமதமாக எழும் குழந்தைக்கூட நேரத்தில் விழித்து உங்களை எழுப்புவார்கள்.மகிழ்ச்சிக்கு காசு தேவையில்லை மனது மட்டும்தான்.

          அதே போல்தான் செடி வளர்ப்பும்.அடுக்கு மாடி குடியிருப்பாயினும் ஒரு ஐந்து தொட்டிகளாவது வைங்க.துளசி,மணிப்பிளான்ட்,புதினா,பச்சைமிளகாய் செடி,கற்பூரவல்லி போன்ற எளிதாக வளரும் செடிகளை வைத்து பராமரிப்பை குழந்தைகளிடம் விடுங்கள். பிறகு பாருங்க .


Comments

Popular Posts