தமிழ் மொழியோட பெருமைகள் தமிழ்மக்கள் அனைவரும் அறிவர்.அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு இதே செழிப்போடு கொண்டு செல்லும் கடமை நமக்கு உண்டு என்பதை உணர்ந்தவர்கள் மிக குறைவு. சரி நம்மால் என்ன செய்யமுடியும் என நினைக்கிறீர்களா? நம்மால் முடிந்த ஒரு காரியம் இருக்கு. அது தமிழ்மொழியை நம் குழந்தைகளுக்கு எழதபடிக்க கற்றுத்தரும் பள்ளிக்களில் சேர்த்துவிடுவதுதான்.தாய்மொழிதானே நாமே சொல்லிக்கொடுப்போம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.நம் மொழியை அவ்வளவு எளிதாக கற்கமுடியாது.வெறும் பேச்சு வழக்கில் இருந்த பல மொழிகள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.அதனால் நம்ம மொழிக்கு அந்த நிலை வரக்கூடாதுன்னா,நாம எந்த நாட்டில் இருந்தாலும் தமிழ் மொழியை நம் குழந்தைகளுக்கு பிழையில்லாமல் எழுத படிக்க வைப்பதே நாம் நம் மொழிக்கு செய்யும் பெரும் தொண்டாகும்.சந்தோஷமாக செய்வோமா சகோதர சகோதரிகளே👍☺☺
    

Comments

Popular Posts