பாரம்பரியத்தை போற்றுவதில் அடுத்து உணவு.நம்ம குழந்தைகளுக்கு பாரம்பரிய உணவோட மகத்துவத்தை புரியவைக்கவும் இந்தக் கோடை விடுமுறையை பயன்படுத்துவோம்.இட்லி,இடியாப்பம்,ஆப்பம்,பனியாரம்,வடைகள்,தட்டை,முறுக்கு,கொழுக்கட்டை,கேழ்வரகு புட்டு,அடை போன்றவற்றை வீட்டிலேயே செய்து அதன் அருமைகளை சொல்லி அசத்துங்கள்.                       அடுத்து இதெல்லாம் செய்யத் தெரியாதே என்று யாரும் சொல்லமுடியாது ஏனெனில் தூய தமிழில் செய்முறை விளக்கங்களுடன் நம் சமயல் ராணிகள் இனையத்தில் பதில்விட்டதை பார்த்து கற்றுக்கொள்ளவும். அதே நேரம் வீட்டில் செய யப்படும் உணவின் சுத்தத்தயும் கூறுங்கள்.நீங்களும் இட்லி மாவு,மிளகாய்ததூள்,மல்லித்தூள்,இடியாப்ப மாவு,ஊறுகாய் ,இட்லிப்பொடி போன்றவற்றை பாக்கெட்டுகளை வாங்காமல் வீடிலேயே தயாரியுங்கள்.கஷ்ட்டமெல்லாம் ஒன்றுமில்லை.நல்ல சுத்தமான பொருட்களை வாங்கி காயவைத்து மிஷினில் கொடுத்து அரைக்க வேண்டியதுதான்.வீட்டில் அரைத்த மிளகாய்த்தாளில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அல்சர் வருவதே இல்லை.

Comments

Popular Posts