வணக்கம் தமிழ் சொந்தங்களே,இப்பொழுது நம் வீட்டு குழந்தைகள் எல்லோரும் கோடை விடுமுறையில் இருக்கிறார்கள் அல்லவா? பெரும்பாலான பெற்றோருக்கு இவர்களை செல்போன்களிடம் இருந்து எப்படி காப்பது பற்றி கவலையில் இருக்கிறார்கள்.அவர்களுக்காக எளிமையான வழிமுறைகள் கூறுகிறேன்,பின்பற்றிப் பாருங்கள் ஆச்சரரியப்படுவீர்கள்.குழந்தைகளுடன் கடைத்தெருவிற்குச் சென்று மரத்தாலான பல்ல ங்குழி,பரமபதம்,பித்தளையிலான தாயக்கட்டை ,ஒரு செஸ் போர்டு நான்கையும் வாங்கித்தாருங்கள்.எப்படி விளையாடுவது என்று கற்றத்தருவதுடன் அந்த விளையாட்டுடன் உங்களுடைய இளமைக்கால அனுபவங்களை சற்று சுவாரஸ்யமாக கூறுங்கள்.

Comments

Popular Posts