இப்பொழுது விடுமுறை நாட்கள என்பதால் நம்மைப் போல் வாரக்கணக்கில் இல்லாவிட்டாலும் ஒன்றிரண்டு நாட்களாவது உறவினர் வீடுகளுக்கு செல்லும் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லவேண்டியது என்ன என்று பார்ப்போம். முதலில் உறவினர் வீட்டு சோபா,மெத்தைகளை நாசுக்காக பயன்படுத்த அறிவுறுத்துங்க.அப்புறம் டிவி ரிமோட் என்னமோ இதுக்கு முன்னாடி டவியே காணத மாதிரி ரிமோட்ட டொக்கு டொக்குன்னு மாத்தி உறவினரை இரத்தக்கண்ணீர் வடிக்க வைப்பதும் கூடாது.அப்பறம் கொடுக்கும் உணவுகளை கேவலப்படுத்தாமல் மரியாதையுடன் சாப்பிடனும்.இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா ஊருக்கு அனுப்பலாம் இல்லைன்னா இருக்கவே இருக்கு பல்லாங்குழியும் பரமபதமும்.

Comments

Popular Posts