வணக்கம் அருமை சகோதர சகோதரி
ளே ,இன்றைக்கு உங்களிடம் சுவாரஸ்யமான ஒரு விஷயமத்தைப்பற்றி பேசலாம் என விரும்புகிறேன்.நம் குழந்தைகளுக்கு கூட்டாஞ்சோறு,நிலாச்சோறு பற்றி கூறி அவர்களை செய்யச்சொல்வது.இந்த கூட்டாஞ்சோறு விளையாட்டை விரும்பாத குழந்தைகளே இருக்கமாட்டார்கள்.அக்கம்பக்க குழந்தைகளை அழைத்து கூட்டாஞ்சோறு விளையாட்டின் சாரம்சத்தை கூறுங்கள்.                   என்ன சமையல்செய்வது என்பதை அவர்களே தேர்வு செய்யட்டும்.யார் யார் என்னென்ன பொருள் கொண்டுவருவது என்று பிரித்துக்கொண்டு பெரியவர்களின் மேற்பார்வையில் சமைக்கச்சொல்லுங்க.ஆனால் விறகு அடுப்பில்தான் செய்ய வேண்டும் அப்போதான் கூடுதல் சுவாரஸ்யம்.இதுபோன்ற விளையாட்டுகள குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கும் பேருதவியாக இருக்கும் முயன்று பாருங்களேன.                                              அடுத்து நிலாச்சோறு வருகின்ற ஞாயிறு சித்திராப்பவுர்ணமி அதை எப்படிக் கொண்டாடுவது என பார்ப்போம்.அருகில் இருக்கும் தோழிகளை ஒன்று சேருங்கள்.ஆளுக்கு ஒரு உணவு என பிரித்து செய்து குடும்பத்துடன் ஒரு வீட்டு மொட்டை மாடியில் நிலா ஒளியை ரசித்தபடி அவரவர் சிறுவயது நினைவுகளுடன் பேசிமகிழுங்கள்.பிறகு உணவை பகிர்ந்து உண்டுபாருங்கள் குழந்தைளின் மகிழ்ச்சியை கண்டு மகிழுங்கள்.மீண்டும் பிறகு சந்திபோம்👍

Comments

Popular Posts