பறவைகளுக்கு உணவளிப்பது பற்றி கூறினேனல்லவா அதில் என்னுடைய சொந்த அனுபவத்தை சொல்றேன் .இயல்பாகவே பறவைகள்,விலங்குகள் மீது என்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் ஆர்வம் அதிகம். எப்பொழுதும் எங்கள் வீட்டில் என் மகனின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட சிட்டுக்குருவி கூடு போர்ட்டிக்கோவில் தொங்கிக்கொண்டிருக்கும்.அதில் வசிக்கும் சிட்டுக்குருவிக்கு ராஜ உபச்சாரம் நடக்கும்.அவைகள் தண்ணீர் உணவு தாரளமாய் கிடைப்பதால் எப்போதும் நான்கு குஞ்சுகள் பொரித்து நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் மயில்கள் நடமாட்டம்  இருந்தது.நமக்குத்தான் காக்காவக் கண்டாலே ஆனந்தம் மயில் சொல்லவா வேண்டும்.அவை நடமாடும் இடங்களுக்கு சென்று அரிசியை போட்டால் அவை வெடிகுண்டை வீசியதுபோல் இருந்த இடத்திலிருந்தே வேகமாக பறந்து மறைந்துவிடும்.ஆனால் நான் சலிக்காமல் அரிசிக் கிண்ணத்துடன் அலைந்ததின் பலனாக இன்று எங்கள் வீட்டைத்தேடி தினமும் எட்டு மயில்கள் காலை ஆறு மணிக்கெல்லாம் வந்து எங்கள் வீட்டின் மாடியில் நான் வெளியே வரும் வரை காத்திருக்கும்.அவைகளுக்கு கம்புஅரிசி போட்டபின்புதான் கோலமே போடுவேன்.நான் சிறிது தாமதமாக எழந்து வந்தால் நடைபயிற்ச்சி செய்யும் எங்கள் ஏரியாவாசிகள் என்னங்க உங்களுக்காக மயில்லாம் காத்துக்கிட்டு இருக்குன்னு சொல்லும்போது மனசுல ஒரு சந்தோஷம் வரும்பாருங்க அப்படி ஒரு சந்தோஷம். 💐




Comments

Popular Posts